உலகம்

இளம்பெண்ணிடம் கொள்ளையடித்த திருடனுக்கு நேர்ந்த விபரீத முடிவு! கர்மா என்பது இதுதானா?

Published

on

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்றும் தவறு செய்தவர்களுக்கு சட்டம் தண்டனை கொடுக்கவில்லை என்றாலும் கர்மா தண்டனை கொடுக்கும் என்றும் முன்னோர்கள் கூறுவதுண்டு. எனவே தவறு செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட அதற்குரிய தண்டனை கிடைக்கும் என்றும் தவறு செய்யாமல், தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்வதே மனிதனுக்கு அழகு என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அதையும் மீறி பல்வேறு வகைகளில் முறைகேடுல்கள், கொலை, கொள்ளைகள் செய்து வரும் நிலையில் அவர்களுக்கான தண்டனையை உடனடியாக சிலருக்கு கிடைத்து வருவது குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பிரேசில் நாட்டில் இளம் பெண் ஒருவரிடம் கொள்ளை அடிக்க முயற்சித்த திருடன் ஒருவனுக்கு அதற்கு அடுத்த சில நொடிகளில் நேர்ந்த விபரீதமான முடிவு குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிரேசில் நாட்டில் உள்ள ஒரு சாலையில் இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு திருடன், திடீரென அந்தப் பெண்ணை தாக்கி அவரிடமிருந்த பொருள்களை கொள்ளை அடித்தார். அவரிடம் இருந்து விலை உயர்ந்த மொபைல் போன் பணம் உள்ளிட்டவற்றை அந்த திருடனை வழிப்பறி கொள்ளை அடித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தன்னிடம் கொள்ளையடித்த திருடனை பிடிக்குமாறு அந்த பெண் கூச்சலிட அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று நிறுத்தி அதில் இருந்தவர்கள் இறங்கி உடனடியாக திருடனை பிடிக்க முயற்சித்தனர். இந்த நிலையில் திருடன் அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்து வேகமாக ஓடிய போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் மீது மோதியதால், அந்த திருடன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இளம்பெண்ணுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்த திருடன் அடுத்த சில நொடிகளில் பரிதாபமாக உயிரை விட்ட இந்த வீடியோவுக்கு ஏராளமான நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். தெய்வம் நின்று கொல்லும் என்பதெல்லாம் அந்த காலம் என்றும் தெய்வம் தற்போது உடனுக்குடனே தண்டனை கொடுத்து வருகிறது என்று ஒரு ஒருவர் கமெண்ட் பதிவு செய்துள்ளார். கர்மா என்பது மிகவும் சக்தியானது என்றும் செய்த பாவத்திற்கு தண்டனை கொடுக்காமல் விடாது என்றும் பலர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

 

Trending

Exit mobile version