உலகம்

தொலைபேசியை விழுங்கிய நபர்: அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு!

Published

on

33 வயது நபர் ஒருவர் செல்போனை விழுங்கிய நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த செல்போனை வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொசோவோ என்ற நாட்டில் உள்ள பிரிஸ்டினா என்ற பகுதியைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் நோக்கியா 3310 என்ற மாடல் செல்போனை வைத்து இருந்தார். இவர் அந்த செல்போனை வாயின் அருகே வைத்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவர் செல்போனை விழுங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்று தான் செல்போனை விழுங்கி விட்டதாக கூறினார். இதுகுறித்து உடனே மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது செல்போன், பேட்டரி செல்போன் பேக் என மூன்றாக பிரிந்து வயிற்றில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த மருத்துவர் குழு செல்போனையும் அதன் பாகங்களையும் வெளியே எடுத்தனர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது நோக்கியா 3310 என்ற மாடல் செல்போன் என்பது தெரிந்ததே, இந்த மாடல் செல்போனை ஒருவர் விழுங்கிய செய்தி தற்போது உலகெங்கும் பரபரப்புடன் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version