உலகம்

துக்கத்தில் ‘AirPod’-ஐ விழுங்கிய நபரால் குடும்பத்தினர் அதிர்ச்சி.. நடந்தது என்ன?

Published

on

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் குடுப்பத்துடன் வசித்து வருகிறார் 38 வயதான பிராட் கவுதியர். இவருக்கு திடீரென மூச்சடைப்பு ஏற்படத் தண்ணீர் குடித்துள்ளார். சுமாராக இருந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து உடலில் பிரச்சனை இருப்பது போல் உணர்ந்துள்ளார்.

தண்ணீர் குடித்தால் சில மணி நேரங்கள் நன்றாக உள்ளதால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், இருந்தால். அப்போது அவர் போனுக்கு பயன்படுத்தி வந்த ‘AirPod’-ல் ஒன்றைக் காணவில்லை. அதை தேடும் போது அவரது மனைவி, நீங்கள் ஒருவேலை அதை விழுங்கி இருப்பீர்களோ என்று பேசி கிண்டல் அடித்துள்ளார். அனைவரும் அதை கேலியாகப் பேசி சிரிக்கும் போது தான் பிரட்டுக்குப் பொறி தட்டியுள்ளது.

தூக்கத்தில் தனக்கு எதையோ விழுங்குவது போல உணர்வு ஏற்பட்டது உடனே மருத்துவமனைக்குச் சென்ற போது நேற்று அவர் சென்ற பாட்டியில் சாப்பிட்ட உணவால் தான் ஏதேனும் பிரச்சனை இருக்கும். எதற்கும் எக்ஸ்-ரே எடுத்து பார்த்துவிடலாம் என்று கூறியுள்ளனர்.

எக்ஸ்-ரே எடுத்த மருத்துவர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிராட் மனைவி விளையாட்டுக்குக் கூறியது போலவே அவர் அந்த ‘AirPod’-ஐ தூக்கத்தில் விழுங்கியுள்ளார்.

பின்னர் மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது குடலிலிருந்து ‘AirPod’-ஐ வெளியேற்றினர். நாம் புது புது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது அதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version