இந்தியா

வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நவீன கும்பகர்ணன்…..வினோத நோயால் பாதிப்பு….

Published

on

இராமாயணத்தில் இராவணின் தம்பி கும்பகர்ணன் வருடத்தில் 6 மாதம் தூங்கியும், 6 மாதங்கள் விழித்தும் நேரத்தை கழித்து வந்ததாக புராண கதைகளில் நாம் கேள்விப்பட்டோம். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிக்கும் புர்காராம்(42) வருடத்தில் 365 நாட்களில் மொத்தம் 300 நாட்கள் தூங்கி கழித்து வருகிறார்.

பலசரக்கு கடை வைத்திருக்கும் புர்காராம் துவக்கத்தில் 2 நாள் தூங்கிய அவர் மெல்ல மெல்ல அது அதிகரித்து ஒரு வாரம், 25 நாட்கள் என தூங்கியிருக்கிறார். எனவே, அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது ‘ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா’ என்கிற வினோத நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இது ஒரு தூக்க நோயாகும். தூக்கத்திலிருந்து எழ முயற்சி செய்தாலும் உடல் ஒத்துழைக்காது. இந்த நோயை குணப்படுத்துவது மிகவும் கஷ்டம் என மருத்துவர்கள் கையை விரித்துவிட்டனர். இப்படி நாள் கணக்கில் அவர் தூங்குவது இந்த வருடமோ, கடந்த வருடமோ இல்லை. சுமார் 23 வருடங்களாக இந்த வினோத நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். வருடத்தில் 300 நாட்கள் தூங்கிவிட்டு 65 நாட்கள் மட்டுமே தனது பலசர கடையை அவர் நடத்துகிறார். இதனால், இவரின் குடும்பமும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version