இந்தியா

குஜராத்தில் முழு ஊரடங்கு என்று போலியான அரசாணையைப் பகிர்ந்த நபர் கைது!

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநில அரசுகள் பகுதி நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்றவற்றை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தின் வடோதராவில் 55 வயதான நபர் ஒருவர், குஜராத்தின் 6 நகரங்களில் முழு நேர ஊரடங்கு என்று போலியான அரசாணை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த போலி அரசாணையில் கூடுதல் தலைமைச் செயலாளரின் கையெழுத்தும் இருந்துள்ளது.

அந்த போலி அரசாணைப் படி 6 நகரங்களில் ஏரல் 11 முதல் 17-ம் தேதி வரை முழு நேர ஊரடங்கு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசு அதிகாரிகள், உடனே காவல் துறைக்குப் புகார் அளித்து, சம்மந்தப்பட்ட நபரைக் கைது செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version