இந்தியா

தாஜ் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சில்லரை நாணயங்களை கொடுத்த இளைஞர்.. ஊழியர்களின் ரியாக்சன்..!

Published

on

மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் உணவு சாப்பிட்ட ஒரு இளைஞர் அந்த உணவுக்கான பில்லை முழுக்க முழுக்க சில்லறை நாணயங்களாக கொடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவுக்கு பல ஆதரவான கமெண்ட்ஸ்களும், சில கண்டனம் தெரிவிக்கும் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பல்வேறு ஐடியாக்களை இளைஞர்கள் தற்போது செயல்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே, அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாஜ் ஹோட்டலுக்கு நான் சென்று சாப்பிட்ட பில்லை முழுக்க முழுக்க சில்லரை நாணயங்களாக கொடுத்துள்ளார். அவர் முதலில் தாஜ் ஹோட்டலுக்கு ஒரு பெரிய பையுடன் செல்லும் காட்சியுடன் உடன் வீடியோ தொடங்குகிறது. அதன் பிறகு அவர் பீட்சா ஒன்றை ஆர்டர் செய்கிறார். அதை ஆற அமர மெதுவாக சாப்பிட்டு விட்டு பில் கொடுக்கும்போது ஒரு பெரிய சில்லறை மூட்டையை எடுத்து மேஜை மீது வைக்கிறார்.

பில் பணம் வாங்க வந்த தாஜ் ஹோட்டல் ஊழியர் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அவர் எந்தவித மறுப்பும் தெரிவிக்க தெரிவிக்காமல் சில்லறையை பெற்றுக் கொண்டதை அடுத்து அந்த இளைஞர் சிரித்துக் கொண்டே வெளியேறும் காட்சியுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. இது குறித்து அந்த நபர் கூறிய போது எல்லோர் கவனத்தையும் பெற வேண்டும் என்பதற்காக சில்லறையாக கொடுத்தேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தாலும் ஒரு சிலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். ஊழியர்களுக்கு சில்லறை எண்ணுவது தான் வேலையா? இது ஊழியர்களின் வேலைப்பளுவை அதிகரிக்கச் செய்யும் செயல் என்று சிலர் கமெண்ட்ஸ் அளித்துள்ளனர். நீங்கள் உண்மையில் அந்த ஹோட்டலுக்கு நன்மை செய்திருக்கிறீர்கள் என்றும் சில்லரை தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் நீங்கள் சில்லரையாக கொடுத்து உதவி செய்துள்ளீர்கள் என்றும் சிலர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து தாஜ் ஹோட்டல் நிர்வாகம் கூறிய போது எங்கள் வாடிக்கையாளர் எவ்வாறு பணம் செலுத்துகிறார் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் எங்கள் வாடிக்கையாளர் எங்களது உணவில் முழு திருப்தி அடைந்தார்களா இல்லையா என்பதை பற்றிய நாங்கள் கவலைப்படுகிறோம் என்றும் தெரிவித்தார்.

இந்த வீடியோ சுமார் ஒரு லட்சத்துக்கு மேலான பார்வையாளர்களை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version