உலகம்

விமானம் தாமதத்தால் மாற்று இதய அறுவை சிகிச்சையை மிஸ் செய்த நபர்.. கதறி அழுததால் பரபரப்பு!

Published

on

மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவர் விமானம் தாமதம் காரணமாக அறுவை சிகிச்சையை மிஸ் செய்து விட்டதை எண்ணி வருத்தம் அடைந்து கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 56 வயதான பேட்ரிக் ஹாலண்ட் என்பவர் இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதயம் கிடைத்தவுடன் உங்களுக்கு தகவல் அனுப்புவோம் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு மருத்துவமனை தகவல் அனுப்பியது.

ஒரு மனிதரிடம் இருந்து வெளியே எடுக்கப்பட்ட இதயம் நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் இன்னொரு மனிதருக்கு அறுவை சிகிச்சை செய்து விட வேண்டும் என்ற நிலையில் பேட்ரிக் ஹாலண்ட் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அவசரஅவசரமாக விமானத்தில் ஏறினார்.

ஆனால் பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாக கிளம்பியதை அடுத்து அவரால் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனை செல்ல முடியவில்லை. இதனை அடுத்து வேறு ஒருவருக்கு அந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் தனக்கு கிடைக்க வேண்டிய இதயம் மிஸ் ஆகி விட்டதை அறிந்து பேட்ரிக் ஹாலண்ட் கதறி அழுத சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து அடுத்த இதயம் கிடைத்தவுடன் அவருக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் சமாதானம் கூறினாலும் அடுத்த இதயம் எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை என்பதால் அவர் மருத்துவமனை அருகிலேயே ஒரு வீடு எடுத்து தங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் தனக்கு இதயம் கிடைக்கும் என்றும் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்வேன் என்றும் அவர் தனது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி வருகிறார். ஏழு குழந்தைகளுக்குத் தந்தையான பேட்ரிக் ஹாலண்ட் விரைவில் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Trending

Exit mobile version