இந்தியா

திருமணத்திற்கு பெண் கேட்டு நடுரோட்டில் போஸ்டருடன் நின்ற வாலிபர்.. அவ்வளவு விளையாட்டா போச்சா?

Published

on

இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் இரண்டு மனங்கள் ஒன்று சேர்வது மட்டும் என்று இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வது என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் திருமணம் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தும் வகையில் வாலிபர் ஒருவர் தனக்கு திருமணத்திற்கு பெண் வேண்டும் என கையில் போஸ்டர் வைத்துக்கொண்டு நடுத்தெருவில் நின்ற வீடியோ இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது புனிதமானது என்பதும் இரு குடும்பத்தின் பெரியவர்கள் தங்கள் வீட்டில் உள்ள பெண் மற்றும் ஆணுக்கு திருமணம் பேசி முடிப்பார்கள் என்பதும் முறைப்படி மந்திரம் ஓதி இரு மனங்களை ஒன்று சேர்ப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நாகரீகம் வளர வளர திருமணம் என்பது கேலிக்கூத்தாகி வருகிறது. பெற்றோர்களுக்கு தெரியாமல் குழந்தைகள் அவர்களாகவே தங்கள் துணையை தேடிக்கொள்வது, திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து கொள்வது உள்பட பல விஷயங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வாலிபர் ஒருவர் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்பதற்காக எனக்கு அரசு வேலையில் உள்ள பெண் வேண்டும் என கையில் போஸ்டரை வைத்து கொண்டு நடுரோட்டில் நின்று அந்த போஸ்டரை காட்டிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த நபர் யார் என்பது சரியாக தெரியாவிட்டாலும் தனக்கு திருமணத்திற்கு மணமகள் கிடைக்கவில்லை என்றும் அதனால் தானே களத்தில் இறங்கி உள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா என்ற பகுதியைச் சேர்ந்த அந்த நபர் தனது விளம்பரத்தில் ’எனக்கு திருமணத்திற்கு அரசு வேலையில் இருக்கும் பெண் வேண்டும், வரதட்சணை தர கூட தயாராக இருக்கிறேன்’ என்று எழுதியுள்ளார். இந்த போஸ்டரை பலரும் கேலியும் கிண்டலுமாகத்தான் பார்த்திருக்கிறார்கள். அவர் உண்மையிலேயே திருமணத்திற்காகத்தான் இந்த போஸ்டரை கையில் வைத்து விளம்பரப்படுத்துகிறாரா? அல்லது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று செய்தாரா? என்ன தெரியவில்லை.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது இந்த விளம்பரத்தை பார்த்துக் கொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலர் கேலியும் கிண்டலும் தான் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இளைஞரை உடனடியாக ஒரு பெண் திருமணம் செய்ய முடிவு செய்வாரா? விளம்பர ஆட்டை பார்த்தவுடன் அவருடன் வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு முடிவு செய்வாரா? திருமணம் என்பது அவ்வளவு கேலிக்கூத்தாகி விட்டதா? என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

மொத்தத்தில் அந்த வீடியோ குறும்புத்தனமாக பதிவு செய்யப்பட்டதா? அல்லது உண்மையாகவே அவர் தன்னை மணக்க விரும்பும் மணமகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version