உலகம்

’லவ் பிரேக் அப் இன்சூரன்ஸ்.. இப்படி ஒரு இன்சூரன்ஸா? எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Published

on

உலகத்தில் பலவகையாக இன்சூரன்ஸ் உள்ளது என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் லவ் பிரேக் இன்சூரன்ஸ் என்று ஒன்று இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கார் இன்சூரன்ஸ், பைக் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் என உலகத்தில் எத்தனையோ இன்சூரன்ஸ் திட்டங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன என்பது தெரிந்ததே. ஆனால் லவ் பிரேக் இன்சூரன்ஸ் என்று ஒரு இன்சூரன்ஸ் இருப்பதை தற்போது தான் கேள்விப்படவே செய்கிறோம்.

காதலன் காதலி ஆகிய இருவரும் காதலிக்கும் நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரியும் நிலை ஏற்பட்டால் யாரால் பிரியுகிறோமோ அவருக்கு அந்த இன்சூரன்ஸ் தொகை செல்லும் என்று கூறப்படுகிறது. ஒரு உறவு முடிவடையும்போது ஏற்படும் துக்கம் என்பது அளவில்லாதது என்பதும் அந்த துக்கத்திற்கு இணையாக ஆறுதல் தரக்கூடியது எதுவுமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் லவ் பிரேக் இன்சூரன்ஸ் என்பது அந்த துக்கத்தை முழுமையாக போக்காது என்றாலும் அந்த பணம் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டவருக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் திட்டம் என்ற இந்த திட்டத்தின் படி காதலன் காதலி ஆகிய இருவரும் ஜாயிண்ட் அக்கவுண்டு ஓபன் செய்து அதில் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். இந்த தொகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து கொண்டு வரும் நிலையில் காதலன் காதலியிடையே பிரிவால் பாதிக்கப்பட்டவர் யார் என்பதை கண்டறிந்து அவருக்கு அந்த இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு ஜோடி மாதம் 500 ரூபாய் இதுபோன்று லவ் பிரேக் இன்சூரன்ஸ் திட்டத்தில் டெபாசிட் செய்துள்ளனர். இருவரும் ஒரு கூட்டு கணக்கு தொடங்கி ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் டெபாசிட் சென்று வந்த நிலையில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த இளைஞர் தனது சமூக வலைதளத்தில் என் காதலி என்னை ஏமாற்றியதால் எனக்கு மிகுந்த மனவருத்தம் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் எனக்கு லவ் பிரேக்கின் இன்சூரன்ஸ் தொகை மூலம் 25,000 கிடைத்தது என்ற குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் நாங்கள் 500 ரூபாய் ஜாயிண்ட் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தோம் என்று யார் ஏமாற்றி விட்டு செல்கிறாரோ அவர்கள் அந்த பணத்தை இன்னொருவருக்கு கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்ற பாலிசியை செய்தோம் என்றும் இந்த இதயம் முறிவு காப்பீட்டின் மூலம் தற்போது எனக்கு 25000 வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களை கவர்ந்துள்ளது என்பதும் பல தங்களது லைக்ஸ்கலை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு இன்சூரன்ஸ் இருப்பதை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றும், காதல் தோல்வி அடைபவர்களுக்கு இது ஒரு ஆறுதலான இன்சூரன்ஸ் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version