இந்தியா

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பைத்தியங்கள்: ரயில் நடைமேடையில் ஆடம்பர காரை ஓட்டிய இளைஞர் கைது..!

Published

on

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சில பைத்தியக்கரத்தான தனமான செயல்களை பல இளைஞர்கள் செய்து வருகிறார்கள் என்பதும் அது பைத்தியக்காரத்தனமாக இருப்பது மட்டும் இன்றி சில சமயம் சட்டவிரோதமாகவும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையிலும் இருப்பதால் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது ஆடம்பர காரை ரயில்வே பிளாட்பார்மில் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவில் உள்ள ஜெகதீஷ்புரா என்ற ரயில் நிலையத்தில் குமார் என்பவர் தனது ஆடம்பர காரை திடீரென ரயில்வே பிளாட்பார்மில் ஓட்டி வந்தது ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் ரயில் பயணிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர் தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக இந்த காரை ஓட்டி வீடியோ எடுத்துள்ளதாகவும் இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் பிளாட்பார்மில் காரை ஓட்டிய குமார் கைது செய்யப்பட்டு அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அது மட்டும் இன்றி ஒரு கார் பிளாட்பாரத்திற்கு வரும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளதோடு சில ரயில்வே அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஆடம்பர காரை எப்படி அவரால் நடைமேடைக்கு கொண்டு வர முடிந்தது என்பதே பெரும் ஆச்சரியமாக உள்ளது என்றும் இதன் பின்னணி குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக பைத்தியக்காரத்தனமாக செயல்களை செய்து சட்ட நடவடிக்கை உட்பட்டு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version