தமிழ்நாடு

ஆட்சி பொறுப்பு ஏற்கும் முன்னரே திமுக மீது அவதூறு பரப்பிய நபர் மீது பாய்ந்த நடவடிக்கை!

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான தமிழக தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது. வரும் 7 ஆம் தேதி, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க, திமுக அரசு பொறுப்பேற்க உள்ளது. இந்நிலையில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே திமுக மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.அதியமான் என்பவர், ‘கோவையில் இருந்து இன்று காலை ஒரு தொழிலதிபர் நண்பர் அழைத்து, நீண்ட நேரம் பேசினார். ஆட்சி மாற்றம் பற்றிய பயம் அந்த பகுதி தொழிலதிபர்களிடம் வெகுவாக உள்ளதை பகிர்ந்து கொண்டார். 1.75 கோடி விலை சொன்ன இடம் ஒன்றை இப்ப 1.50 கோடிக்கு உடனடியாக வாங்கிக் கொள்ளும்படி அவரின் வெளிநாட்டு வாழ் நண்பர் ஒருவர் அவரை நேற்றில் இருந்து தொடர்ந்து போன் போட்டு வற்புறுத்துவதாக கூறினார்’ இவ்வாறாக அவர் திமுக மீது அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து திமுகவின் என்.ஆர்.ஐ பிரிவு நிர்வாகி, எம்.எம்.அப்துல்லா, ‘அதியமான் என்று ஒரு நபர். திமுக வெற்றி பெற்று ஆட்சியே இன்னும் அமைக்காத நிலையில் திமுக மீது ஆதாரமற்ற வெறுப்பு பிரச்சாரத்தை ஆரமித்து விட்டார். இவர் எழுதிய பொய் செய்திற்காக இவர் மீது திரு.பாலமுரளி புகார் அளித்துள்ளார். இன்னும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இவர் மீது புகார் அளிக்க இருப்பதாக தெரிய வருகிறது! ” என்ன சொன்னாலும் பேசாம இருக்க இது கலைஞர் காலத்து கட்சி இல்லைடா..காலம் மாறிப்போச்சுனு” சொன்னா எவன் கேக்குறான்?

திமுக அரசின் மீது விமர்சனம் செய்யுங்கள்..உண்மை இருந்தால் மட்டும் கற்பனையில் கதை விட்டால் இனி ஊருக்கு ஊர் வழக்கு விசாரணை என்று அலைய வேண்டி வரும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version