டிவி

‘இந்த’ பாலிவுட் நடிகர் தான் தமிழ் பிக்பாஸ்-க்கு குரல் கொடுத்தாரா..?

Published

on

பாலிவுட் நடிகர் ஒருவர் தான் இத்தனைக் காலமாக பிக்பாஸ் தமிழ் குரல் கொடுத்துள்ளார் என்பது ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரையில் 4 சீசன்களாக நிறைவு பெற்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு இருக்கும் ரசிகர்களை விட பிக்பாஸுக்கு ரசிகர்கள் அதிகம். அதாவது அந்த பிக்பாஸ் குரலுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த பிக்பாஸ் குரலுக்குச் சொந்தக்காரரை மட்டும் இதுவரையில் யாருக்கும் அறிமுகப்படுத்தவில்லை.

அந்த கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் ஒரு பாலிவுட் நடிகர் என்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சதிஷ் சாரதி சாஷோ என்பவர் தான் இத்தனைக் காலமாக பிக்பாஸ் தமிழ் குரல் ஆக ஒலித்துக் கொண்டிருந்துள்ளார். இவர் பாலிவுட்டில் நடிகர் ஆகவும் உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான மஞ்சுநாத் பயோபிக் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலாமானார்.

நடிப்பு மட்டுமல்லாது தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், உடற் பயிற்சியாளர், பாடகர் எனப் பல பரிமாணங்கள் உடன் பாலிவுட்டில் கலக்கி வருகிறார் சதிஷ் சாரதி சாஷோ.

Trending

Exit mobile version