தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி கார் மீது காலனி வீசியவர் கைது: எந்த கட்சியை சேர்ந்தவர்?

Published

on

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசிய பேர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு காரில் வந்து கொண்டிருந்த போது திடீரென அமமுகவினர் சிலர் அவரது காரை வழிமறித்தனர் என்பதும் ஒரு சிலர் செருப்பை அவரது கார் மீது வீசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஒரு சிலரை கைது செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு எடப்பாடி பழனிசாமி கார் சென்றபோது அவருடைய காரின் மீது காலணி வீசியவர் அமமுக நிர்வாகி என தெரியவந்துள்ளது

இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அவர் பெயர் மாரிமுத்து என்பதும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் அண்ணாசதுக்கம் போலீசார் கூறி வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசிய தங்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என அமமுகவினர் கூறி வந்த நிலையில் தற்போது அமமுகவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version