இந்தியா

பாஜகவிடம் இருந்து மாநிலங்களை காக்க வேண்டும்: ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி கடிதம்

Published

on

பாஜகவிடம் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலுள்ள தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஒன்று மேற்கு வங்க மாநில தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இங்கு ஆளும் கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜகவிடம் இருந்து மாநிலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பாஜக அல்லாத மாநிலங்களின் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்

டெல்லி முதல்வரைவிட ஆளுநருக்குதான் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது என்றும், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு பிரச்சனைகளை உருவாக்குகிறது என்றும் அந்த கடிதத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்

தேசிய அளவில் பாஜக எதிராக ஒரு அணியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மம்தா பானர்ஜி எழுதிய இந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அமைந்தது போல் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என சமீபத்தில் ராகுல் காந்தி முன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்க்கும்போது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version