இந்தியா

இப்ப எப்படி ஒட்டு கேட்பிங்க: செல்போன் கேமிராவை டேப் போட்டு ஒட்டிய மம்தா பானர்ஜி!

Published

on

செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெகாசஸ் என்ற செயலி மூலம் செல்போன்கள் ஒட்டுக் கேட்டதாகவும் இதற்காக பாஜகவின் மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் அமைந்திருந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கவும் இந்த செல்போன் ஒட்டுக்கேட்பு தான் காரணம் என்றும் கூறப்பட்டது அதேபோல் பிரசாந்த் கிஷோரின் செல்போன்கள் கேட்கப்பட்டு அவருடைய திட்டங்கள் அனைத்தும் முன்கூட்டியே தெரிந்து கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது செல்போன் கேமராவில் டேப்போட்டு ஒட்டி நிருபர்களிடம் காண்பித்த புகைப்படம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் எப்படி ஓட்டு கேட்கிறார்கள் என்று பார்க்கலாம் என தனது டேப் போட்டு ஒட்டிய போட்டியை செல்போனை காண்பித்துள்ள மம்தா பானர்ஜி பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் தனது செல் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அச்சம் இருப்பதால் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆனால் பேச முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

Trending

Exit mobile version