இந்தியா

காங்கிரஸ் இல்லாமல் பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி: மம்தாவின் முயற்சி பலிக்குமா?

Published

on

காங்கிரஸ் கட்சி இல்லாமல் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் பாஜக இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அந்த கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கிய தீரவேண்டும் என காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் அடுத்தடுத்து தோல்வி பெற்று வருவதை அடுத்து மம்தா பானர்ஜி தற்போது களத்தில் இறங்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி இல்லாமல் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை இணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக தமிழகத்தில் திமுக, தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி, மகாராஷ்டிராவில் சரத்பவார் கட்சி, உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி கட்சி உள்பட பல்வேறு கட்சிகளுடன் இணைந்து அவர் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி தலைமையில் அமையவிருக்கும் இந்த கூட்டணிக்கு மம்தா பானர்ஜியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் இல்லாமல் மம்தா பானர்ஜி எடுக்கும் இந்த முயற்சி பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் கபில்சிபல் அவர்கள் கருத்து கூறிய போது, ‘காங்கிரஸ் இல்லாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது ஆன்மா இல்லாத உடல் என்றும் எதிர் கட்சிகளின் ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரமிது என்றும் தெரிவித்துள்ளார். இம்முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்ற மம்தா பானர்ஜியின் கருத்துக்களுக்கும் அவர் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது புதிய கூட்டணி குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ‘இந்திரா காந்தியை மக்கள் இதுவரை மன்னிக்கவில்லை என்றும் அதேபோல் மோடியையும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். சிங்கப்பெண், இரும்பு பெண்மணி இந்த அடையாளங்களுக்கு சொந்தக்காரரான மம்தா பானர்ஜி மோடி மற்றும் அமித் ஷாவுக்கு கடுமையான சவாலாக இருந்து வரும் நிலையில் அவரது முயற்சி எந்த அளவுக்கு பலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version