இந்தியா

திடீர் திருப்பம்: நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி தோல்வி என அறிவிப்பு

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் பாஜக 70 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த சிபிஎம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வரை முன்னிலையில் இருந்தார். அவர் வெற்றி பெறுவார் என்று உறுதியாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென மம்தா பானர்ஜி தோல்வி என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி என்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சேர்ந்து சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் இருந்தும் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்துள்ளதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version