இந்தியா

மம்தா பானர்ஜி மீது தாக்குதலா? காலில் கட்டுடன் புகைப்படம் வைரல்!

Published

on

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதில் ஒரு மாநிலம் மேற்குவங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார் என்பதும் நேற்று அவர் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவதால் அவருக்கு காயமடைந்துள்ளதாகவும் இதனை அடுத்து அவர் காலில் கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை பவானிபூர் என்ற தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை செய்துவிட்டு தனது காரில் ஏற முயற்சி செய்தபோது திடீரென அவரது பின்னால் இருந்து 4, 5 பேர் ஆவேசமாக அவரை தள்ளிவிட்டதாகவும், இதனால் காலில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் இந்த தாக்குதல் நடைபெறும் போது காவலர் யாரும் தனக்கு அருகில் இல்லை என்றும் தனக்கு காவலர்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும் கூறினார். மேலும் என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது என்றும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version