தமிழ்நாடு

மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி!

Published

on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் தீவிரமாக கடந்த சில வாரங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அவரது காலில் காயம் ஏற்பட்ட போதிலும் சக்கர நாற்காலியில் இருந்து அவர் பிரசாரம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு பிரச்சார மேடைகளில் அவர் மோடி மற்றும் அமித்ஷாவை கடுமையாக தாக்கி வருகிறார் என்பதும் மத்திய பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை அவர் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version