இந்தியா

மத்திய அரசுக்கு எதிரான மம்தா பேரணியில் திரண்ட மாபெரும் கூட்டம்… விழிபிதுங்கிய பாஜக; கலக்கத்தில் மோடி – அமித்ஷா!

Published

on

மேற்கு வங்க மாநிலத்தில் இந்த மாத இறுதியில் பல கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளும் பரஸ்பரம் மற்றவர்கள் பற்றி கடுமையாக சாடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, எரிபொருட்களின் தொடர் விலையேற்றத்துக்கு எதிராக நேற்று மாபெரும் பேரணியை நடத்தினார். இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் நேற்றைய பேரணியில் பேசிய மம்தா, ‘தேர்தலுக்கு முன்னர் உஜ்வாலா திட்டம் மூலம் அனைவருக்கும் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என்று சொல்கிறது மத்திய அரசு. ஆனால், தேர்தலுக்குப் பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதில்லை.

இனிமேலும் இது தொடரக் கூடாது. ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். சிலிண்டர்களின் தொடர் விலையேற்றத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முழுக் காரணம் மத்திய அரசு மட்டும் தான்.

மேற்கு வங்க மாநிலத்தில் மக்களுக்கு அரிசி இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் அதைச் சமைத்துச் சாப்பிட எரிபொருள் இருப்பதில்லை. அதைக் கொடுக்க வேண்டியது யார் பொறுப்பு’ என்று கேட்டுள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version