தமிழ்நாடு

தேர்தல் வரும்போது மட்டும் ராமர் உங்களது தேர்தல் ஏஜெண்டாக மாற்றப்படுகிறார்: மோடியை விளாசிய மம்தா பானர்ஜி!

Published

on

மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவையும், பிரதமர் மோடியையும் ராமர் விவகாரத்தில் விட்டு விளாசியுள்ளார்.

சமீபத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் வாகனத்திற்கு அருகே ஜெய் ஸ்ரீராம் என்று மூன்றுபேர் கோஷமிட்டனர். இதனையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் அம்மாநில காவல்துறையினர். இந்நிலையில் ஜர்க்ராம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜெய் ஸ்ரீராம் என துதி பாடியவர்களை மம்தா பானர்ஜி சிறையில் அடைத்துள்ளார். நானும் அதேபோல துதி பாடி மம்தா பானர்ஜியை வரவேற்கலாம் என நினைக்கிறேன். அப்போது என்னையும் அவர் சிறையில் அடைப்பார் அல்லவா? பின்னர் ராமருக்கு துதி பாடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி நபர்களுக்கு நான் உதவுவேன் என்றார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிஷ்ணுப்புரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி. அதில், நரேந்திர மோடி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறார். ஆனால் அவர் ஒரு ராமர் கோயிலையாவது கட்டியிருப்பாரா? தேர்தல் வரும்போது மட்டும் ராமர் உங்களது தேர்தல் ஏஜெண்டாக மாற்றப்படுகிறார்.

தேர்தல் நேரத்தில் நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் கோஷமிடும்படி கட்டாயப்படுத்துகிறீர்கள். கோஷங்களை உங்களால் மற்றவர்கள் மீது திணிக்க முடியாது. நாங்கள் ராமரை மதிக்கிறோம். ராமருக்கு எவ்வாறு மரியாதை அளிக்க வேண்டுமென எனக்கு தெரியும். ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், மா மாதி மனுஷ் எர் ஜெய், திருணமூல் காங்கிரஸ் எர் ஜெய் என நான் பல முழக்கங்களை எழுப்புவேன். ஆனால் பாஜக மக்கள் மீது திணிக்க விரும்பும் முழக்கங்களை நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன் என விளாசினார்.

seithichurul

Trending

Exit mobile version