இந்தியா

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

Published

on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிக்கொண்டு இருக்கும் போதே மைக் ஆஃப் செய்யப்பட்டதை அடுத்து கடுப்புடன் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறியுள்ளார்.

பட்ஜெட் 2024-2025ல் தமிழ்நாடு புறக்ககணிக்கபட்டதை தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்க போவதில்லை என அறிவித்தார். தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா என நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு மாநிலங்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

மம்தா பேனர்ஜியும் நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பேனர்ஜி பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று நிதி ஆயோக்கை கலைத்துத் திட்ட கமிஷனை மீண்டும் கொண்டு வர வலியுறுத்துவேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது மைக் மூடப்பட்டதாகக் கூறியுள்ளார். “இது மிகவும் அவமானமானது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மைக்கை மூடுவது முறையல்ல,” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்திற்குத் தேவையான உதவிகள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, மைக்கை முடக்கிவிட்டனர். “இது எங்களது உரிமையை மீறும் செயல். நாங்கள் எவ்வாறு உதவி கேட்கும் போது இவ்வாறு செய்ய முடியும்?” என்று மம்தா பானர்ஜி ஆதங்கப்பட்டுள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு மும்பு நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். “இது மீண்டும் நடக்கக்கூடாது. நமது உரிமையை பாதுகாக்கவேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜியின் இந்த செயல் பல்வேறு விமர்சனங்களையும் ஆதரவுகளையும் பெற்றுள்ளது.

author avatar
Tamilarasu

Trending

Exit mobile version