இந்தியா

‘பாஜக தோக்கணும்னா ஒண்ணா சேரணும்!’- சோனியாவை சந்தித்தப் பின் மம்தா; மோடி & கோ கேம் ஓவரா?

Published

on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்தார். சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்தும், பாஜகவை வீழ்த்தும் யுக்திகள் குறித்தும் பேசப்பட்டது.

சந்திப்பைத் தொடர்ந்து மம்தா, ‘சோனியா மற்றும் ராகுல் என்னை தேநீர் குடிக்க அழைத்தனர். நாங்கள் பெகாசஸ் விவகாரம் குறித்தும், நாட்டில் கொரோனா நிலவரம் குறித்தும் விரிவாக ஆலோசித்தோம். மேலும் எதிர்கட்சிகள் ஒன்றாய் நிற்க வேண்டியதன் அவசியம் பற்றியும் நாங்கள் பேசினோம்.

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றாக ஓரணியில் நிற்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணி செய்ய வேண்டும்’ என்று உறுதிபட கூறினார்.

2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சிகள் மம்தா பானர்ஜி தலைமையில் ஒன்று கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மோடிக்கு எதிரான எதிர்கட்சிகளின் வேட்பாளராக மம்தா முன்னிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version