இந்தியா

மக்களை ஓட்டு போட விடாமல் பாஜக குண்டர்கள் தடுக்கின்றனர்: மம்தா பானர்ஜி குற்றச்ச்சாட்டு

Published

on

தனது நந்திகிராம் தொகுதி உள்பட மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஓட்டு போட விடாமல் பாஜக குண்டர்கள் தடுத்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு ஆதரவாக ராணுவப் படைகள் இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராமம் உள்பட 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்று நண்பகலில் மம்தா பானர்ஜி தனது வாக்கை செலுத்துவதற்காக வாக்குச்சாவடிக்கு சென்றார்.

அப்போது அவர் வாக்களித்த உடன் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த வாக்குச்சாவடி உள்பட பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்களை ஓட்டுப்போட பாஜகவினர் அனுமதிக்கவில்லை என்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த பாஜக குண்டர்கள் பொதுமக்களை ஓட்டு போட விடாமல் தடுப்பதாகவும் அதற்கு துணை ராணுவ படையினரும் உதவி செய்வதாகவும் கூறினார்.

மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறிய மம்தா பானர்ஜி உடனடியாக அங்கிருந்து கொண்டே கவர்னருக்கு போன் மூலம் இந்த புகாரை தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version