கிரிக்கெட்

ஓய்வை அறிவித்தார் யார்க்கர் மன்னன் மலிங்கா!

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை வீரர் லசித் மலிங்கா யார்க்கராக பந்துவீசி எதிரணியை திணறடிப்பதில் வல்லவர். இவர் கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில் இவரது பந்துவீச்சை பார்த்து அச்சப்படாத பேட்ஸ்மேன்களே இல்லை. அந்த அளவுக்கு ஆக்ரோஷமாகவும், யார்க்கராகவும் வீசுபவர். இவர் 2010-ஆம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் வரும் 26-ஆம் தேதி இலங்கை அணி வங்கதேச அணியுடன் ஒருநாள் போட்டி தொடரை ஆரம்பிக்கிறது. அந்த முதல் ஒருநாள் போட்டியுடனே மலிங்கா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது இலங்கை வீரர் மலிங்கா ஆவார்.

219 போட்டிகளில் மலிங்கா 315 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 523 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரன் முதலிடத்திலும் 399 விக்கெட்டுகளுடன் சமிந்தா வாஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். உலகக் கோப்பை தொடரில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையையும் மலிங்கா பெற்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version