சினிமா செய்திகள்

தனுஷுக்கு ஜோடியான மலையாள லேடி சூப்பர்ஸ்டார்!

Published

on

மலையாள சினிமா உலகில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் மஞ்சுவாரியர். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதன்முறையாக நடிக்கவுள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என மூன்று வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி, வடசென்னை 2ம் மற்றும் 3ம் பாகங்களுக்கு முன்னதாக, வேறு ஒரு படத்தில் இணையவுள்ளதாக தெரிவித்தது.

அதனை தொடர்ந்து, அசுரன் எனும் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியானது.

தனுஷ் மாறுபட்ட கெட்டப்பில் உள்ள அசுரன் போஸ்டர் வைரலானது. இந்நிலையில், தனுஷுக்கு ஜோடியாக இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அசுரன் படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி 26ம் தேதி முதல் தொடங்குகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version