சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர்.. கமல், ரஜினியுடன் நடித்தவர்!

Published

on

கமல், ரஜினி ஆகியோருடன் நடித்த உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி, கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் உன்னி கிருஷ்ணன். இவர் தமிழிலும் பம்மல் கே சம்மந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர். உய் என்ற சினிமா பாணிக்கு உருவம் கொடுத்தவர். இப்போது உன்னி கிருஷ்ணனுக்கு 98 வயதாகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா உறுதியானது.  இதனையடுத்து உன்னி கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டது.  தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக பூரணமாக கொரோனாவில் இருந்து விடுபட்டார்.

Trending

Exit mobile version