சினிமா செய்திகள்

நீங்க இல்லைன்னா எனக்கு ரொம்ப போரடிக்கும்: ட்ரோல் செய்தவர்களை ஊக்குவித்த மாளவிகா மோகனன்!

Published

on

உங்களைப்போன்ற மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இல்லை என்றால் எனக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கும் என தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வந்தது என்பதும் குறிப்பாக தனுஷின் அடுத்த படத்தில் நாயகியாக அவர் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாளவிகா மோகனன் மீம் ஒன்று சமூக தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் பல் விலக்குவது போன்ற புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வெவ்வேறு விதங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களை மீம்ஸ்களை தயார் செய்தனர். இந்த மீம்ஸ்கள் ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய அளவில் வைரலான நிலையில் தற்போது இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன்

என்னைப்பற்றி மீம்ஸ்களை நான் மிகவும் தாமதமாகத்தான் பார்த்தேன். ஆனால் பார்த்தவுடன் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. நான் பல் விலக்குவதை இப்படியெல்லாம் மீம்ஸ் கிரியேட் செய்ய முடியுமா என நினைத்து விழுந்து விழுந்து சிரித்தேன். உங்களை போன்ற மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இல்லை என்றால் நிச்சயம் என்னுடைய வாழ்க்கை போரடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்

தன்னைக் கிண்டல் செய்து ட்ரோல் செய்தவர்களையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பதிவு செய்துள்ள மாளவிகாவின் டுவிட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version