இந்தியா

அதிர்ச்சி அளிக்கின்றது: ஹிஜாப் சர்ச்சை குறித்து மலாலா கருத்து!

Published

on

மாணவிகள் அணியும் ஹிஜாப் பிரச்சனை குறித்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் திடீரென மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனை அடுத்து ஹிந்து மாணவர்கள் காவி உடை அணிந்து வந்தார்கள் என்பதும் தலித் மாணவர்கள் நீல உடை அணிந்து வந்தார்கள் என்பதால் இந்த பிரச்சனை பெரிதாகியது.

இந்த பிரச்சனை குறித்து அனைத்து ஊடகங்களிலும் விவாதம் செய்யப்பட்டது என்பதும் மத்திய அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா இது குறித்து தனது கருத்தை தெரிவித்த போது பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இந்திய தலைவர்கள் முஸ்லிம் பெண்ணை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார.

மேலும் பெண்கள் உடையை முன் வைத்து அவர்களை கல்வி கற்க விடாமல் தடுப்பது அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பெண்களின் ஆடை குறைந்தாலும், கூடினாலும் அது பிரச்சனையாகி விடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்களை விளிம்பு நிலைக்கு தள்ள வேண்டாம் என்று இந்திய தலைவர்களுக்கு கேட்டுக் கொள்வதாகவும் மலாலா தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version