தமிழ்நாடு

புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்!

Published

on

தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் ஒரு சில கட்சிகள் இன்னும் வேட்பாளர்களின் பட்டியலையே அறிவிக்காமல் உள்ளன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுவை வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இரண்டாம் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தப் பட்டியலில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது., இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரவிருக்கும் 2021 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் எதிர்கொள்ளவிருக்கும் வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு:

மங்கலம் பகுதியில் எம் சுப்பிரமணி, பாகூர் தொகுதியில் தினேஷ், மண்ணாடிப்பட்டு தொகுதியில் கோபாலகிருஷ்ணன், ஊசுடு தொகுதியில் சங்கர், மணவெளி தொகுதியில் சுந்தராம்பாள் மற்றும் முத்தியால்பேட்டை தொகுதியில் சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version