தமிழ்நாடு

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்!

Published

on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை இன்னும் தேர்தல் ஆணையம் வெளியிடாத நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அனேகமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளுடன் தமிழக நகரங்கள் அல்லாடுகின்றன. இவைகளைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள். #தேடி_தீர்ப்போம்_வா.

 

Trending

Exit mobile version