தமிழ்நாடு

ஒட்டுமொத்தமாக ராஜினாமாவா? காலியாகும் மக்கள் நீதி மய்யம் கூடாரம்?

Published

on

கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது அந்த கட்சி ஒட்டுமொத்தமாக கூடாரம் காலியாகி விட்டதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபத்தி ஒன்றாம் நாள் மதுரையில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் தொடங்கினார்.

இந்த கட்சி பாராளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றை சந்தித்து உள்ளது என்பதும் இந்த கட்சியின் உறுப்பினர்கள் ஒரு வார்டு தேர்தலில் கூட ஜெயிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிட்ட பெரும்பாலானோர் தோல்வி அடைந்ததோடு டெபாசிட்டும் இழந்தனர் என்பதும், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியிலிருந்து ஏற்கனவே டாக்டர் மகேந்திரன் உட்பட பல பிரபலங்கள் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த நிலையில் தற்போது மேலும் சிலர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பணிபுரிந்த சமூக வலைதள மற்றும் மீடியா பணி செய்தவர்கள் மற்றும் அட்மின் பிரிவுகளில் வேலை செய்தவர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கூடாரம் காலியாகி விட்டதாம் கட்சி வட்டாரங்கள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version