உலகம்

சுடோகு விளையாட்டின் காட்பாதர் காலமானார்!

Published

on

உலகம் முழுவதும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றான சுடோகு என்ற விளையாட்டின் காட்பாதர் என்று அழைக்கப்படும் மகி காஜி என்பவர் காலமானார். அவருக்கு வயது 69

சுடோக்கு விளையாட்டு என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் கணிதமேதை லியோன்ஹார்ட் யூலர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இந்த விளையாட்டின் நவீன வடிவம் 1980 ஆம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த மகி காஜி என்பவர் பிரபலப்படுத்தினார்.

இந்த விளையாட்டுக்கு சுடோக்கு என்ற பெயரை வைத்தவர் இவர் தான் என்பதும் இந்த பெயருக்கு ஒவ்வொரு எண்ணும் ஒற்றையாக இருக்க வேண்டும் என்று ஜப்பானில் பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுடோகு விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான மகி காஜி கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது காலமானார் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஜப்பான் நாடு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து சுடோகு புதிர் விளையாட்டு ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

9×9 என 81 கட்டங்கள் அடங்கிய இந்த விளையாட்டில் ஒரு சில எண்கள் விடுபட்டு இருக்கும். அந்த எண்களை சரியாக கண்டுபிடித்து கணித அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக இந்த விளையாட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version