சினிமா செய்திகள்

எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – புலம்பும் பரிணித்தி சோப்ரா!

Published

on

இந்தியா பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் பயோபிக் படம் உருவாகி வருகிறது. முதலில், இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வந்தார். திடீரென அவரது உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால், தற்போது இந்த படத்தில் அவருக்கு பதிலாக நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையும் பாலிவுட் நடிகையுமான பரிணித்தி சோப்ரா நடித்து வருகிறார்.

சாய்னா நேவால் போல நடிப்பது தனக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், இதையெல்லாம் எப்படி சாதித்தீர்கள் சாய்னா என தனது ட்விட்டர் பக்கத்தில் சாய்னாவிடம் பரிணித்தி கேட்டுள்ளார்.

 

அதற்கு பதிலளித்த சாய்னா நேவால், எனது பயோபிக் படத்திற்காக தாங்கள் செய்யும் தியாகம் நிச்சயம் திரையில் தெரியும் என்று பாராட்டியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version