இந்தியா

படேலுக்கு சிலை வைத்தால் மட்டும் போதாது இந்தியாவை பிளவுபடுத்தாமல் இருங்க: பொளந்து கட்டிய மஹுவா மொய்த்ரா!

Published

on

மத்திய அரசு உப என்னும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தை திருத்தம் செய்து மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை மேற்கு வங்கத்தை சேர்ந்த திரினாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா விளாசியுள்ளார்.

மஹுவா மொய்த்ரா பேசிய போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான படேல் அமர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார். மோடி அரசு படேலுக்கு உயரமான சிலை வைத்தால் மட்டும் போதாது. அவர் ஒன்றுபடுத்திய இந்தியாவை பிளவுபடுத்தாமல் இருக்க வேண்டும் என்றார் அதிரடியாக.

தொடர்ந்து பேசிய அவர், இப்போது கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்தின்கீழ் அரசுக்கு பிடிக்காத ஒரு நபரை பயங்கரவாதி என்று கைது செய்து சிறையில் அடைக்க முடியும். அதாவது அரசை ஆதரிப்போர் கடவுளர்களாகவும், எதிர்ப்போர் சாத்தான்களாகவும் கற்பிக்க முடியும். எதிர்க்கட்சி தலைவர்கள், மனித உரிமை ஆதரவாளர்கள், சிறுபான்மையோர், பாஜக அரசு முயற்சிக்கும் ஒரே இந்தியா ஒரே மொழி போன்ற கோட்பாடுகளை எதிரப்போரை தேச விரோதிகளாக முத்திரை குத்த முடியும் என காட்டமான விமர்சனங்களை முன்வைத்து பேசினார் மஹூவா மொய்த்ரா.

seithichurul

Trending

Exit mobile version