சினிமா

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்த மகத்

Published

on

சிம்பு ஹீரோவா மேகா ஆகாஷ் ஹீரோயினாகவும் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறார். இதனை லைகா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றி பெற்ற அத்தாரின்டிக்கி தாரேதி படம், தமிழில் ரீ-மேக் ஆகிறது. இந்தப் படம் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தில் முக்கியக் கேரக்டரில் நடிகர் மகத்தும் நடிக்கிறார். மங்காத்தா, ஜில்லா, படங்களில் நடித்த மகத், விஜய் டிவி நடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியான போது நடிகர் சிம்புக்கு நெருங்கிய நண்பர் ஆனார். அந்த நட்பின் காரணமாக இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர்.

Trending

Exit mobile version