தமிழ்நாடு

கோவை மாநகராட்சி மேயர் ஆகின்றாரா மகேந்திரன்?

Published

on

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த மகேந்திரனுக்கு கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் திமுக சற்று வலுவிழந்து இருப்பதால் அதை பலப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் மகேந்திரனுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் அவரை வைத்து திமுகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகேந்திரனுக்கு என ஒரு வாக்கு வங்கி கொங்கு மண்டலத்தில் இருப்பதால் அவரை விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக நிறுத்த வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு அவர் நிறுத்தப்பட்டால் கண்டிப்பாக கோவை மாநகராட்சி திமுக தான் என்று உறுதியாக சொல்லப்பட்டு வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட போதும் சரி, பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட போதும் மகேந்திரன் அதிக வாக்குகளைப் பெற்றார் என்பதும் அவருக்கு என கோவையில் தனி செல்வாக்கு இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.

மாற்றுக் கட்சியில் இருந்து வந்த செந்தில் பாலாஜி உள்பட பலருக்கு தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் ஏற்கனவே வாய்ப்பு அளித்துள்ளதால் மகேந்திரனுக்கும் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version