இந்தியா

பெட்ரோல், டீசல் வரியை குறைத்த 4வது மாநிலம்: தமிழகம் எப்போது?

Published

on

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறித்த நிலையில் மூன்று மாநிலங்கள் உடனடியாக வாட் வரியை குறைத்தன.

ராஜஸ்தான், ஒடிசா மற்றும் கேரளா ஆகிய மூன்று பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் வாட் வரியை குறித்த நிலையில் தற்போது மகாராஷ்டிர மாநிலமும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோல் மீதான வாட் வரி 2 ரூபாய் 8 காசுகளும் டீசல் மீதான வாட் வரி ஒரு ரூபாய் 44 காசுகள் குறைப்பதாக அறிவித்துள்ளார். மக்களின் நலன் கருதி மகாராஷ்டிர மாநில அரசு வாட் வரியை குறைத்துள்ளது அடுத்து அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் 10 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது .

மகாராஷ்டிராம் ராஜஸ்தான்ம் கேரளா மற்றும் ஒரிசா ஆகிய நான்கு மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வாட் வரியை குறைத்து உள்ள நிலையில் தமிழக அரசு பிடிவாதமாக இன்னும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 என்ற விலையிலும், இன்று சென்னையில் டீசல் ஒரு லிட்டர் விலை 94.24 ரூபாய் எனவும் விற்பனையாகிறது.

seithichurul

Trending

Exit mobile version