இந்தியா

ரூ.14 குறைவு என்பதால் அண்டை மாநிலம் சென்று பெட்ரோல் வாங்கும் பொதுமக்கள்!

Published

on

ஒரு லிட்டருக்கு 14 ரூபாய் குறைவு என்பதால் மகாராஷ்டிரா மாநில மக்கள் அண்டை மாநிலமான குஜராத் சென்று பெட்ரோல் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது என்பதும் இதனை அடுத்து பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்து வந்ததால் பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனாலும் தமிழகம் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை விட குஜராத் மாநிலத்தில் பெட்ரோல் விலை 154ரூபாய் குறைவாக உள்ளது. இதனால் மகாராஷ்டிர மாநில எல்லையில் உள்ள பொதுமக்கள் குஜராத் சென்று பெட்ரோல் வாங்கி வருவதாக கூறப்படுகிறது

அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தை விட குஜராத் மாநிலத்தில் டீசல் விலை 3 ரூபாய் 50 காசுகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version