இந்தியா

மின்சாரம், தண்ணீர், கேஸ் எல்லாம் கட்.. எங்க தெரியுமா?

Published

on

மகராஷ்டிரா மாநிலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு இல்லங்களை காலி செய்யாவிட்டால், வீட்டிற்குத் தேவையான அனைத்தும் நிறுத்தப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகராஷ்டராவில் அரசு இல்லங்கள், குடியிருப்புகளில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள், அவர்கள் பணி ஓய்வு, பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகும், அந்த வீட்டை காலி செய்யாமல் இருப்பதாக புகார்கள் வந்தன. இதனால் அரசு தரப்பில் பல முறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை.

மேலும், அடுத்தடுத்து வரக்கூடிய அரசு உயர் அதிகாரிகளுக்கு வீடு ஓதுக்க முடியாமல், இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தற்போது மகராஷ்டிரா அரசு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசுஊழியர்கள் பணிநீக்கம், பணி ஓய்வு பெற்ற பின்னர் 3 மாதத்திற்குள்ளாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.

அதையும் மீறி வீட்டில் தங்கிருந்தால் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, எரிவாயுக்கான கேஸ் பைப்லைன் என அனைத்தும் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version