இந்தியா

1ஆம் வகுப்பு முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தரவு!

Published

on

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என மகாராஷ்டிர மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கிறது என்பதும் மூன்றாவது அலை நாடு முழுவதும் வீசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு திடீரென ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் திங்கள் முதல் பள்ளிகள் தொடங்கும் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் உலக வங்கியை கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா அவர்கள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூடுவது நியாயமில்லை என்றும் அதேபோல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தேவையில்லை என்றும் கொரோனாவோடு வாழ பழகிக்கொள்ளுங்கள் என்றும் அறிவித்திருந்தார். இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில்தான் மகாராஷ்டிராவில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் திங்கள் முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அவர்கள் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் கல்வி திறன் குறைந்து வருவதால் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களிலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version