இந்தியா

நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கும் மற்றொரு மாநிலம்!

Published

on

இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டாலும் தமிழகம் மட்டும் ஆரம்பம் முதலே இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் நீட்தேர்வு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அந்த தீர்மானம் அனுப்பப்பட்டது என்பதும் அதேபோல் தற்போது திமுக ஆட்சியிலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்பதும் இந்த தீர்மானமும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த தேர்வுக்கு தடை விதிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் தற்போது திடீரென மகாராஷ்டிரா மாநிலமும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலி என்பவர் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நீட் தேர்வால் மத்திய அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே பயன் பெற்று வருவதாகவும், மாநில அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வினாத்தாள் கசிவு, போலி மாணவர்கள் பங்கேற்பு ஆகியவை இருப்பதால் நீட் தேர்வில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சமூக நீதியற்ற தேர்வாக நீட்தேர்வு கருதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை அடுத்து மகாராஷ்டிர மாநிலமும் தற்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும் கூடிய விரைவில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version