இந்தியா

ஓலா பைக்கை கழுதையில் கட்டி இழுத்து சென்ற நபர்: என்ன காரணம் தெரியுமா?

Published

on

ஓலா நிறுவனம் வழங்கி வரும் எலக்ட்ரிக் பைக் தற்போது திடீர் திடீரென தீ பிடித்ததால் பெரும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சரியில்லை என அந்த பைக்கை வாங்கிய ஒருவர் கழுதையில் கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சச்சின் என்பவர் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் வாங்கினார். இந்த ஸ்கூட்டர் ஆறு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் திடீரென ரிப்பேர் ஆகிவிட்டது. இதனையடுத்து அவர் ஓலா நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தார். ஓலா நிறுவனம் சர்வீஸ் எஞ்சினியரை அனுப்புவதாக கூறியும் யாரும் சர்வீஸ்க்கு வரவில்லை.

அதன் பிறகு மீண்டும் மீண்டும் அவர் கஸ்டமர் சர்வீஸ் தொடர்பு கொண்டபோதும் அவர்களிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் வெறுத்துப்போன சச்சின் தனது ஓலா பைக்கை, கழுதை ஒன்ரில் கட்டி சாலையில் ஊர்வலமாக எடுத்துச் சென்றார் .

இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலானது ஓலா நிறுவனத்திற்கு தெரியவந்ததை அடுத்து நிறுவனம் உடனடியாக அந்த நபருக்கு அவருடைய மைக்கை சரி செய்ய இன்ஜினியர்கள் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

ஏற்கனவே ஓலா எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து வரும் நிலையில் சர்வீஸ் குறைபாடு காரணமாக மக்கள் மத்தியில் ஓலா நிறுவனத்தின் மதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version