இந்தியா

கோவிட்-19: ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்தது மகாராஷ்டிரா!

Published

on

கோவிட்-19 பரவலைத் தடுக்க, மகாராஷ்டிரா அரசு ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகத் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட, மகாராஷ்டிரா அரசின் முதன்மை செயலாளர் அஜோய் மேதா, “மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காப்ரேஷன் ஆணையர்கள் உள்ளிட்டவர்களுடனான ஆலோசனையை அடுத்து ஊரடங்கு நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில், புதிய ஊரடங்கு நீட்டிப்பின் படி, அத்தியாவசிய தேவைகளைத் தவிர ஷாப்பிங் மற்றும் பிற பணிகளுக்காகத் தேவையில்லாமல் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருபவர்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தனிப்பட்ட சுகாதாரம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,64,626 நபர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 70,622 நோயாளிகள் கொரோனா சிகிச்சையைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version