இந்தியா

தவறுதலாக வந்த ரூ.15 லட்சம்: பிரதமர் கொடுத்ததாக நினைத்து செல்வு செய்ததாக கூறிய விவசாயி!

Published

on

விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூபாய் 15 லட்சம் செலுத்தப்பட்ட நிலையில் அந்த பணம் பிரதமர் தனக்கு கொடுத்ததாக நினைத்துக் கொண்டு செலவு செய்து விட்டதாக விவசாயி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டால், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் கிடைக்கும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விவசாயி ஜனார்த்தனன் என்பவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் தவறுதலாக செலுத்தப்பட்டது.

இந்த பணத்தை பிரதமர் மோடி தனக்கு அளித்த பணமாக நினைத்துக்கொண்டு அந்த விவசாயி அதில் இருந்து 9 லட்ச ரூபாயை எடுத்து வீட்டை கட்டி விட்டார். இந்த நிலையில் சில மாதங்களுக்குப் பின்னர் தவறுதலாக பணம் செலுத்தப்பட்டு விட்டதாகவும் அந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வங்கி அதிகாரிகள் கேட்ட போது பிரதமர் கொடுத்த பணம் என்று நினைத்து செலவு செய்து விட்டதாக கூறினார்.

இதனைஅ அடுத்து அவரிடமிருந்த மீதி உள்ள ஆறு லட்ச ரூபாயை மட்டும் வங்கி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பிரதமர் தனக்கு கொடுத்ததாக தவறுதலாக வந்த பணத்தை செலவழித்த விவசாயி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version