சினிமா

ஓடிடியில் வெளியாகும் விக்ரம் – துருவ் படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி….

Published

on

நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

mahaan

கேங்ஸ்டர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் விக்ரமின் 60வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

mahaan

இப்படம் தியேட்டரில் வெளியாகும் என விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இப்படம் பிப்ரவரி 10ம் தேதி ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைமில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விக்ரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version