தமிழ்நாடு

‘மதுரைக்காரன் தப்பு பண்ணமாட்டான்..!’- செல்லூர் ராஜூவின் புது உருட்டு

Published

on

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக சார்பில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது, ‘மதுரைக்காரன் தப்பு பண்ணமாட்டான்’ என்று தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்டார்.

அவர் மேலும் பேசுகையில், ‘மதுரையில் முன்பெல்லாம் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் சாக்கடையும், கழிவு நீரும் கலந்திருக்கும். ஆனால், இன்று அது மிக சுத்தமாக காட்சியளிக்கிறது. சென்னைக்கு எப்படி ஒரு மெரினா கடற்கரை இருக்கிறதோ, அதைப் போல மதுரைக்கு தெப்பக்குளம் உள்ளது.

அதேபோல முன்பு வைகை நதியில் மிக அசுத்தமான நீர் ஓடும். ஆனால், இன்று அப்படியா..? சுத்தமான நீர் செல்கிறது. லண்டன் மாநருக்கு எப்படி ஒரு தேம்ஸ் நதி உள்ளதோ, அதைப் போல மதுரைக்கு வைகை நதி இருக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு 2,5000 ரூபாய் பரிசுத் தொகுப்பானது, மாநிலத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. அதில் எந்த தவறாக நடந்துள்ளதா? இல்லை அல்லவா. நான் தவறு செய்ய மாட்டேன். மதுரைக்காரன் தப்பு பண்ணமாட்டான்’ என்று கலகலப்பாக பேசினார்.

செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு, கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பி, விசில்களைப் பறக்க விட்டனர்.

seithichurul

Trending

Exit mobile version