தமிழ்நாடு

மதுரை-சிங்கப்பூர் நேரடி விமானம்: டாடா அறிவிப்பால் மதுரை மக்கள் மகிழ்ச்சி!

Published

on

மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டுமானால் சென்னை வந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கும் நிலையில் தற்போது மதுரையில் இருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமானம் சேவை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

மதுரையிலிருந்து ஏற்கனவே சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் துபாய், சார்ஜா, இலங்கை ஆகிய வெளிநாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமான பயணிகள் அதிகம் இருப்பதை அடுத்து சமீபத்தில் ஏர் இந்தியாவைக் கைப்பற்றிய டாடா மதுரையில் இருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமானம் இயக்க முடிவு செய்துள்ளது. மதுரை-சிங்கப்பூர் விமானம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் அதாவது செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் மதுரையில் இருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு விமான சேவை இயக்கம் உள்ளதாகவும் மார்ச் 29 முதல் இந்த சேவை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 29ஆம் தேதி வரை ஆறு மாத காலத்திற்கு சோதனையை சேவையாக நடத்தப்படும் என்றும் இந்த விமானங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரையிலிருந்து மும்பை டெல்லி மற்றும் திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பயணிகளின் வருகை குறைவினால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version