தமிழ்நாடு

மதுரைக்கு வர இருப்பது மெட்ரோ ரயில் இல்லையாம்.. மெட்ரோ லைட் தானாம்!

Published

on

சென்னையைத் தொடர்ந்து விரைவில் தூங்கா நகரம் மதுரையில் மட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருவதாக www.bhoomitday.com இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், மதுரையில் மெட்ரோ நிறுவனம் செய்துள்ள ஆய்வில் திருமங்கலம் – ஒத்தக்கடை வழித்தடத்தில் மெட்ரோ லைட் ரயில் சேவை அமைப்பதற்கான பணிகள் தான் நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மெட்ரோ லைட்

மெட்ரோ லைட் ரயில் சேவை மெட்ரோ ரயில் போல இல்லை என்றாலும், டிராம் போல இருக்கும். மொத்தம் 3 பெட்டிகள் இந்த ரயிலில் இருக்கும்.

31 கிலோ மீட்டர் வழித்தடத்தில் திருமங்கலம், கப்பலூர், பசுமாலை, வசந்த நகர், மதுரா கல்லூரி, மதுரை ஜங்ஷன், சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், காவல் ஆணையர் அலுவலக, கே.புத்தூர், மாட்டுத்தாவணி, உதான் குடி, உயர்நீதிமன்றம் மற்றும் ஒத்தக்கடை என மொத்தம் 20 ரயில் நிலையங்கள் இருக்கும்.

மதுரை மட்டுமல்லாமல் சென்னையிலும் மெட்ரோ லைட் சேவையைக் கொண்டு வர சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டு வருகிறது. சென்னை வேளச்சேரி முதல் தாம்பரம் வரையில் 15.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த மெட்ரோ லைட் பாதை அமைக்கப்பட உள்ளது.

மெட்ரோ லைட் ரயில் திட்டம் ஏற்கனவே டெல்லி, கேரளாவின் கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version