தமிழ்நாடு

மதுரை – சென்னை: முதல் பேருந்து, கடைசி பேருந்து எத்தனை மணிக்கு?

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை முதல் இரவு நேர ஊரடங்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுநேர ஊரடங்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஊரடங்கின்போது இரவு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள் செல்வதற்கு மட்டும் ஆட்டோ, கார் ஆகியவை அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரவு நேர பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என்பதால் ஆம்னி பேருந்துகளும், அரசு விரைவு பேருந்துகளும் பகல் நேரத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது மதுரையில் இருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து மதுரைக்கும் முதல் பேருந்து மற்றும் கடைசி பேருந்து எப்போது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

மதுரையிலிருந்து சென்னைக்கு முதல் பேருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் என்றும் அதேபோல் நண்பகல் 12 மணியுடன் சென்னைக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகளும் அதே நேரத்தில் தொடங்கும் மற்றும் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது
கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version